என் மலர்
இந்தியா

விமான பணிப்பெண்ணின் கையெழுத்தை அசத்தலான ஓவியமாக மாற்றிய கலைஞர்
- ராபின் பார் என்ற ஓவிய கலைஞர் இண்டிகோ ஏர்லைன்சில் பயணம் செய்கிறார்.
- ஒரு வெள்ளை காகிதத்தில் விமான பணிப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
பார்க்கும் நபர்களை அச்சு அசலாக வரையும் ஓவியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பறக்கும் விமான பயணத்தின் போது ஓவியர் ஒருவர் தனது அசத்தலான திறமையை காட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அதில், ராபின் பார் என்ற ஓவிய கலைஞர் இண்டிகோ ஏர்லைன்சில் பயணம் செய்கிறார். அப்போது அவர், ஒரு வெள்ளை காகிதத்தில் விமான பணிப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
பின்னர் அந்த பணிப்பெண்ணின் கையெழுத்தை வைத்தே அவர் பிரமிக்க வைக்கும் வகையில் ஒரு காதல் ஜோடியின் புகைப்படமாக வரைந்த காட்சிகள் பயனர்களை மிகவும் ரசிக்க செய்துள்ளது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவரது திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Next Story






