சிக்கனை சூடாக்கி பொறித்தார்- அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றிய வீடியோ

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில், ஒருவர் சிக்கன் துண்டுகளை அயர்ன் பாக்சில் சூடாக்கி பொறிப்பது போன்று காட்சிகள் உள்ளது.காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இணைய பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிக்கனை சூடாக்கி பொறித்தார்- அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றிய வீடியோ
Published on

சமூக வலைதளங்களில் கற்பனைக்கும் எட்டாத சில வீடியோக்களை காண முடியும். அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில் துணிகளை இஸ்தரி செய்ய பயன்படுத்தப்படும் அயர்ன் பாக்சை அடுப்பாக மாற்றி சமைத்த காட்சிகள் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒருவர் சிக்கன் துண்டுகளை அயர்ன் பாக்சில் சூடாக்கி பொறிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், இணைய பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், வாஷிங் மெஷினில் சிக்கனை கழுவி இருப்பார் எனவும், மற்றொருவர், அடுத்த நாளே உங்கள் சட்டை கோழி போன்ற வாசனையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் இது ஆண்கள் விடுதி விஷயம் என்றும், 'ஆர்.ஐ.பி. அயர்ன் பாக்ஸ்' என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகளுடன் வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com