நான் ஆய்வு செய்யும் இடத்திலேயே இப்படியா? அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த மும்பை மேயர்- வீடியோ

மும்பையில் உள்ள முக்கிய சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி ஒருவர் விழுந்து பாதிக்கப்பட்டதால் மேயர் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
மும்பை மேயர்
மும்பை மேயர்
Published on

தென்மேற்கு பருவமழை நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை எட்டியுள்ளது. காலதாமதாக மும்பையில் பருவமழை தொடங்கினாலும், நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மும்பை மேயர் ரிது தவ்டே

இதனைத் தொடர்ந்து இன்று காலை மும்பை மாநகராட்சி மேயர் ரிது தவ்டே, ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது சாலை அருகே மழை வெள்ளம் எப்படி வெளியேறுகிறது. குப்பைகள் எப்படி அகற்றப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலை பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் ஒருவர் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். பள்ளம் முழுவதுமாக மழை நீர் தேங்கி நின்றது. இதனால் இடுப்பளவு பள்ளத்தில் விழுந்ததால், அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் கைக்கொடுத்து பள்ளத்தில் இருந்து தூக்கிவிட்டனர்.

இதனால் மேயர் ரிது தவ்டே கடும் கோபம் அடைந்தார். உடனே அருகில் இருந்த அதிகாரிகளிடம், இந்த பள்ளத்தை ஏன் சரி செய்யவில்லை. ஒருவேளை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்டால், அதில் எச்சரிக்கை வாசகம் அடங்கிய போர்டு வைக்க வேண்டாமா? என்று கடுமையாக சாடினார். மேலும், இதுபோன்று நடந்தால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே ஆதித்யா தாக்கரே, "மழிவான அரசியலில் கவனம் செலுத்துவதை விட, நிர்வாகம் நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்" எனத் தெரிவித்து்ளளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com