என் மலர்
இந்தியா

ஆனா இது புதுசா இருக்குண்ணே... பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து செல்பி எடுத்த வாலிபர்
- உள்ளாடைகளை திருடிய வாலிபர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
- இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி பெங்களூருக்கு வந்து உள்ளார்.
பெங்களூர்:
பெங்களூரு வித்யாநகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்களின் உள்ளாடைகளை காயவைத்து இருந்தனர். அப்போது பகல் நேரத்தில் அந்த பகுதியில் சுற்றிதிரிந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த உள்ளாடைகளை மட்டும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஹெப்பகோடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
உள்ளாடைகளை திருடிய வாலிபர் கேரளாவை சேர்ந்த அமல்என்ஜி (23) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி பெங்களூருக்கு வந்து உள்ளார். பின்னர் ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரது அறையில் தங்கி இருந்து வேலை தேடிவந்தார். அப்போது பகலில் சுற்றிதிரியும் அவர் வீட்டின் வெளியில் காயப்போடப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடிசென்றது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது திருடிசென்ற பெண்களின் உள்ளாடைகளை அணிந்து செல்பி மற்றும் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அமல்என்ஜியை அவரது அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் பெண்களின் 20 ஜோடி உள்ளாடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.






