என் மலர்
இந்தியா

கோவை-மங்களூரு ரெயிலில் மாணவியிடம் ஆபாசமாக நடந்தவர் கைது
- அதிர்ச்சியடைந்த மாணவி, பயத்தில் அலறினார். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
- அவரது அந்த செயல் குறித்து காசர்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் படப்பேங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜோசப். சம்பவத்தன்று இவர் கோவையில் இருந்து மங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவரிடம் ஆடையை அவிழ்த்து காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, பயத்தில் அலறினார். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் உஷாரானதும், ஜார்ஜ் ஜோசப் தனது செயலை நிறுத்தினார். அவரது அந்த செயல் குறித்து காசர்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜார்ஜ் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவியை பார்த்து ஜார்ஸ் ஜோசப் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story






