Mamata Banerjee | எந்த தவறும் நடக்கக்கூடாது! ஸ்டிராங் ரூமிற்கு திடீர் விசிட் அடித்த மம்தா பானர்ஜி

ஊடகங்களுக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்த பரிந்துரை செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
Mamata Banerjee | எந்த தவறும் நடக்கக்கூடாது! ஸ்டிராங் ரூமிற்கு திடீர் விசிட் அடித்த மம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மமதா பானர்ஜி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை செயல்முறையை மாற்றும் எந்த முயற்சியையும் கடுமையாக எச்சரித்தார். பாபனிபூரில் உள்ள EVM ஸ்டிராங் ரூமை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வெளியானது.

பாபனிபூரில் தனது தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான சகவத் மெமோரியல் பள்ளியில் இரவு 12:07 மணிக்கு வெளியே வந்த மமதா, அங்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தங்கினார். “வேட்பாளர் அல்லது ஒரு முகவர் மட்டுமே எண்ணிக்கைப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார். ஊடகங்களுக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்த பரிந்துரை செய்துள்ளேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களின் வாக்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். புகார்களை பெற்றதும் உடனடியாக இங்கு வந்தேன். மத்திய படைகள் முதலில் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை செயல்முறையை மாற்ற திட்டம் இருந்தால் அது பொறுத்துக் கொள்ளப்படாது,” என்று கூறினார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஏப்ரல் 29-ஆம் தேதியன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாபனிபூர் தொகுதி எண்ணிக்கை மையத்துக்கு சந்தேகத்தின் பேரில் மமதா சென்றார். தனது தேர்தல் முகவருடன் உள்ளே நுழைந்த அவர் பல மணி நேரம் அங்கு தங்கினார்.

கொல்கத்தா மேயரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான ஃபிர்ஹாத் ஹகீம் அங்கு வந்தபோதும் மமதாவை சந்திக்க முடியவில்லை. “முதலமைச்சர் உள்ளே இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை. வேட்பாளராக அவருக்கு ஸ்டிராங் ரூமை பார்வையிட உரிமை உள்ளது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாது” என்று ஹகீம் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com