

திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பாஜக குண்டர்கள் முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சாலையோரம் அவர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கட்டிடத்தில் இருந்து சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன. இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா கூறுகையில் "இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாஜக தொண்டர்ளக் உள்ளனர். அந்த இடத்தில் போலீசார் இருந்தனர். அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, குணால் கோஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மீதும் முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, தன் மீது முட்டைகளால் தாக்கப்பட்டதாக டி.எம்.பி. இளைஞர் அணி தலைவர் சவுமித்ரா பானர்ஜி குற்றம்சாட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.