

அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் அதாவது ஜூன் மாத தொடக்கம் முதல் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, இந்தியன், பாரத், ஹெச்பி கேஸ் இணைப்புகளை திரும்ப ஒப்படைத்தல் உள்ளிட்டவைகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.
அரசின் திரவ பெட்ரோலிய எரிவாயு திருத்தம் கடந்த 25ந்தேதி திருத்தப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் நோக்கம், குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைப் பெறும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் நுகர்வோருக்குக் கூடுதல் வசதிகளை வழங்குவதாகும்.
மாற்றங்கள்:
உங்கள் பகுதியில் PNG இணைப்பு இருந்தால் அதற்கு மாற வேண்டும்:
உங்கள் பகுதியில் PNG கேஸ் வசதி இருந்தால் LPGயை கைவிட்டு அந்த வசதிக்கு மாற வேண்டும் என கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஜூன் மாதத்துடன் அதற்கான 3 மாத காலக்கெடு முடிவடையும் நிலையில், உங்கள் பகுதியில் PNG வசதி இருந்தும் இன்னும் நீங்கள் மாறவில்லை என்றால் உங்கள் LPG சிலிண்டர் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
30 நாட்கள் கெடு:
புதிய PNG இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள், பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் LPG இணைப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வசதியும் உண்டு.
ஒரு வீடு ஒரு கேஸ் இணைப்பு:
PNG பயன்படுத்துபவர்கள் புதிய மீண்டும் LPG சிலிண்டருக்கு விண்ணப்பிக்கவோ, ரீபில் செய்யவோ முடியாது.
சிலிண்டர் முன்பதிவு விதிமுறைகள்:
நெருக்கடி காரணமாக ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கான கால இடைவெளி நகரப் பகுதிகளில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 99% சிலிண்டர் பதிவுகள் ஆன்லைன் மூலமாகவே டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
எனவே முறைகேடுகளை தவிர்க்க சிலிண்டர் டெலிவரியின் போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யைக் கூறினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.
KYC சரிபார்ப்பு:
கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க KYC விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மற்றும் இதுவரை சரிபார்ப்பு செய்யாத நுகர்வோர், தங்களின் பயோமெட்ரிக் ஆதார் மூலம் KYC-யை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.