பைத்திரக்காரனைப் போல., மனைவி மீதான குற்றச்சாட்டில் கார்கேவை கடுமையாக விமர்சித்த அசாம் முதல்வர்

குற்றச்சாட்டு முன்வைப்பதற்கு முன்னதாக, அது சரிதானா என சாரிபார்க்க வேண்டும் என்று ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்
பைத்திரக்காரனைப் போல., மனைவி மீதான குற்றச்சாட்டில் கார்கேவை கடுமையாக விமர்சித்த அசாம் முதல்வர்
Published on

அசாம் மாநில முதல்வராக ஹிமாந்தா சர்மா உள்ளார். அங்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக ஹிமாந்தா சர்மாவின் மனைவி ரிங்கி புயான் சர்மாவு மூன்று பாஸ்போர்ட்கள் வைத்துள்ளார். அவருடைய சொத்து மதிப்புகளை ஹிமாந்தா சர்மா வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெர்ரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் "இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தும் அனைத்தும் ஏஜென்சிகளும் மத்திய அரசின் கீழ் வருகிறது. அவர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் ஏற்கனவே பவன் கெர்ராவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தட்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, அது குறித்து சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹிமாந்தா சர்மா கூறியதாவது:-

எனது மனைவி மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை கேட்பதற்கான பவன் கெர்ராவை போலீசார் தேடி கண்டுபிடிப்பார்கள். அவர் டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு ஓடி விட்டார். அவர் பாதாள உலகத்திற்கு சென்றாலும், போலீசார் விடமாட்டார்கள்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகிவிட்டது. அவர் பைத்தியக்காரனை போன்று பேசுகிறார். குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, வெளிநாட்டு அமைச்சரிடம் கேட்டிருக்க வேண்டும்.

பவன் கெர்ரா காட்டிய பேப்பரை ராகுல் காந்திதான் கொடுத்திருக்கக் கூடும். இந்த வழக்கு ராகுல் காந்த வரைக்கும் நீளும்.

இவ்வாறு ஹிமாந்தா சர்மா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com