லடாக்கில் புதிய 5 மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்கத் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
லடாக்கில் புதிய 5 மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!
Published on

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்க துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிதாக நுப்ரா, ஷாம், சாங்தாங், ஜான்ஸ்கர் மற்றும் டிராஸ் ஆகிய 5 மாவட்டங்கள் உருவாகுவதன் மூலம், இரண்டு மாவட்டங்களாக மட்டுமே இருந்த நிர்வாகப் பகுதி தற்போது 7ஆக அதிகரித்துள்ளது.

மக்களுக்கும், அரசுக்குமான இடைவெளியை குறைக்க, சிறிய நிர்வாக அலகுகளை உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை இதன்மூலம் நிறைவேற உள்ளது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால் அப்பகுதிகளில் புதிய நிர்வாக அலுவலகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்கள் விரைவாகக் கிடைக்கும்.

2019-இல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது, லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com