என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயித்துக்கு தொடர்பு?
- டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள்.
- காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது.
டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வருமான ஹபீஸ் சயீத் மற்றும் துணை தலைவர் சைபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள். எப்போதுமே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு காட்டுக்குள் சென்று பதுங்கு குழியில் இருப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து புதிய தாக்குதலுக்கு உத்தரவுகள் வரும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்வார்கள். மேலும் டி.ஆர்.எப். அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை ஆகியவை உதவிகள் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பில் பெரும்பாலான வெளி நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உள்பட காஷ்மீர் முழுவதும் பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.






