டெல்லியில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து விமானத்தில் செல்லும் 106 வயது மூதாட்டி

106 வயதான குட்டியம்மா தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார்.குட்டியம்மாவிற்கு டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
டெல்லியில் நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க கேரளாவில் இருந்து விமானத்தில் செல்லும் 106 வயது மூதாட்டி
Published on

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் குட்டியம்மா. 106 வயதான இவர் தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார். இதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் இன்று டெல்லிக்கு விமானத்தில் செல்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது பொக்கை வாய் திறந்து சிரித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com