"ஜெய் ஸ்ரீ ராம்" சொல்லும் நோயாளிகளுக்கு மருத்துவ கட்டணத்தில் ரூ.500 தள்ளுபடி - பிரபல Cardiologist அறிவிப்பு | Kolkata

அந்த போஸ்டரில் பாஜக கொடி மற்றும் தொப்பி அணிந்த அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
"ஜெய் ஸ்ரீ ராம்" சொல்லும் நோயாளிகளுக்கு மருத்துவ கட்டணத்தில் ரூ.500 தள்ளுபடி - பிரபல Cardiologist அறிவிப்பு | Kolkata
Published on

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவ மூத்த இதய நோய் நிபுணரின் கட்டண சலுகை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பி.கே. ஹஸ்ரா ' ஜெய் ஸ்ரீ ராம்' கியூ ஆர் குறியீடு உடன் வெளியிட்டுள்ள போஸ்டரில், பாலிகஞ்ச் ஃபடியில் உள்ள தனது கிளினிக்கில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடும் நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனைக் கட்டணத்தில் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் பாஜக கொடி மற்றும் தொப்பி அணிந்த அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு அவர் இவ்வாறு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹஸ்ராவின் பதிவு கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஹஸ்ராவின் செயல்களுக்கு விளக்கம் கோரியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com