2025 பட்ஜெட் தாக்கலுக்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது.நிதிசேகரிக்க வருமான வரியுடன் சேர்ந்து வசூலிக்கப்படும் கூடுதல் வரி.
2025 பட்ஜெட் தாக்கலுக்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார்.

பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய கூறுகள்:

பட்ஜெட் மதிப்பீடுகள் [ BE ] - அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் மதிப்பிடப்பட்ட நிதி.

மூலதனச் செலவு [ capex ] - வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரசு பயன்படுத்தும் பணம்.

செஸ் வரி [ cess ] - சுகாதாரப் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட பொது உள்கட்டமைப்புகளுக்கு நிதிசேகரிக்க வருமான வரியுடன் சேர்ந்து வசூலிக்கப்படும் கூடுதல் வரி. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com