கேரளம்: பினராயி விஜயனை சந்தித்து வாழ்த்துப் பெற்ற வி.டி. சுதீஷன்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருந்தார்.
கேரளம்: பினராயி விஜயனை சந்தித்த வி.டி.சுதீஷன்!
Published on

கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி.சதீசன், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடந்த 2021 முதல் 2026 வரை பினராயி விஜயன் முதலமைச்சராகவும், வி.டி.சதீசன் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டனர். தற்போது இருவரின் நிலைகளும் தலைகீழாக மாறியுள்ளன. வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க, பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட உள்ளார்.

பினராயி விஜயனைச் சந்திப்பதற்கு முன்பாக, வி.டி.சதீசன் கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோசப் மற்றும் பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (UDF) 102 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி (LDF) வெறும் 35 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது. இதில் சிபிஎம் கட்சி மட்டும் 26 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com