கேரளாவில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எவ்வளவு?- உடனடியாக வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல் | Kerala polls

தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் மற்றும் சதவீதத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
கேரளாவில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எவ்வளவு?- உடனடியாக வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல் | Kerala polls
Published on

கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 9-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 78.03 சதவீதம் வாக்குள் பதிவான தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைபெற்று நேற்று வரை 3 நாட்கள் முடிவடைந்த நிலையில், தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எவ்வளவு? என்பதை இறுதி அப்டேட்டாக தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான வி.டி. சதீசன் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஏப்ரல் 12-ந்தேதி வரை தொகுதி வாரியாக பதிவான வாக்குள், வாக்கு சதவீதம், தபால் வாக்கு புள்ளி விவரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. உடனடியாக அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவைகள் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com