வயநாட்டில் நிலச்சரிவு.. மண்ணுக்குள் சிக்கிய மக்கள் - மீட்பு பணி தீவிரம்

பாலத்தின் மீது பெருமளவு மண் சரிந்து விழுந்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு
வயநாட்டில் நிலச்சரிவு
Published on

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே கல்லடியில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு

மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கல்லடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் மண்ணுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாகனங்களும் உள்ளே நிலச்சரிவுக்குள் சிகியுள்ளன.

முதற்கட்ட தகவலின்படி, கனமழையால் பாலத்தின் மீது பெருமளவு மண் சரிந்து விழுந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

தகவலறிந்து கல்பெட்டா மாநகராட்சியில் இருந்து ஐந்து தீயணைப்புப் படைப் பிரிவுகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தடைந்தன.

மீனங்காடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழு, விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் வயநாடு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை குழு ஒன்று சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுள்ளது.

மீட்பு

இதுவரை 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு நடத்த இடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நிலச்சரிவைத் தொடர்ந்து, மேப்பாடி-சுரல்மலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முதல்வர்

மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அமைச்சர் டி. சித்திக் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவைத் தொடர்ந்து, முதலமைச்சர் விடி சதீஷன், மாவட்ட அமைச்சர் டி. சித்திக் உடன் அவசரக் கூட்டம் நடத்தினார்.

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்களை வயநாடு செல்லுமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

கனமழை

நிலச்சரிவு ஏற்பட்ட கல்லடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனலை பெய்த நிலையில் நேற்று சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com