மகள் என்றும் பாராமல் தந்தை செய்த செயல்... சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்தது கேரள ஐகோர்ட்

பள்ளியில் அளித்த ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி கூறியிருக்கிறார்.சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மகள் என்றும் பாராமல் தந்தை செய்த செயல்... சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்தது கேரள ஐகோர்ட்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின்போது தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், மாணவியின் தந்தையை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com