கேரளாவின் முதல் திருநம்பி ஆணழகன் விஷம் குடித்து தற்கொலை- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கடந்த காதலர் தினத்தன்று திருநம்பி பிரவீன்நாத், தன்னோடு நெருக்கமாக பழகிவந்த திருநங்கை ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவின் முதல் திருநம்பி ஆணழகன் விஷம் குடித்து தற்கொலை- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
Published on

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தின் முதல் திருநம்பி ஆணழகன் பிரவீன்நாத் (வயது 20).

திருநம்பியாக இருந்து ஆணழகன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றதன்மூலம் இவர் மாநிலம் முழுவதும் பிரபலமானார். இதற்காக பிரவீன்நாத்தை பலரும் பாராட்டினர்.

கடந்த காதலர் தினத்தன்று திருநம்பி பிரவீன்நாத், தன்னோடு நெருக்கமாக பழகிவந்த திருநங்கை ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதுவும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு பிறகு பிரவீன்நாத், திருநங்கை மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். கடந்த சில வாரங்களாக இவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரவின்நாத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிரவீன்நாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com