Assembly Election | ராகுல் காந்தியின் பிரசார பயணம் திடீர் ரத்து

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Assembly Election | ராகுல் காந்தியின் பிரசார பயணம் திடீர் ரத்து
Published on

கேரளம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி கேரளம் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளாவிற்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com