பூங்கா, சரணாலயங்களில் சுற்றுலா பயணிகள் திறந்தவெளி வாகனத்தில் செல்வதற்கு தடைவிதித்த கர்நாடகா

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவரை யானை மிதித்து கொன்ற நிலையில், பாதுகாப்பு முறையில் கர்நாடகா அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது.
பூங்கா, சரணாலயங்களில் சுற்றுலா பயணிகள் திறந்தவெளி வாகனத்தில் செல்வதற்கு தடைவிதித்த கர்நாடகா
Published on

கர்நாடகாவில் புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு திறந்தவெளி வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற 12 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியது. அதைத் தொடர்ந்து பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலும் திறந்தவெளி வாகனத்தில் சென்ற தம்பதியினர் சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் தனது குடும்பத்தோடு கரையில் நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கும்கி யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் திறந்தவெளி வாகனங்களில் உடையாத கண்ணாடிகள் மற்றும் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com