காவிரி நதிநீர் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படனும்: அதற்கு நாங்கள் தயார்- கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

காவிரி நதிநர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தையால்தான் தீர்க்கனும். அதற்கு கர்நாடகா மாநில அரசு தயாராக இருக்கிறது.
காவிரி நதிநீர் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படனும்: அதற்கு நாங்கள் தயார்- கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
Published on

காவிரி நிதிநீர் படுகையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறியும், தமிழக அரசின் இசைவு இன்றியும் மேகதாது அணையை கட்ட விரும்புகிறது. இது தொடர்பாக சமீபத்தில் கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்ற டி.கே. சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நேற்று தனித்தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்தார். இது அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராமலிங்க ரெட்டி கூறியதாவது:-

கர்நாடக மாநிலம், தங்களுக்கான பகிர்வு நீரை மட்டுமே கேட்கிறது. தமிழ்நாட்டிடம் இருந்து கூடுதலாக ஒரு சொட்டு நீரை கூட கேட்கவில்லை. மேகதாது அணை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநில விவசாயிகளுக்கும் பலன் தருவதாக இருக்கும்.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தையால்தான் தீர்க்கனும். அதற்கு கர்நாடகா மாநில அரசு தயாராக இருக்கிறது. எங்களுக்கான பகிர்வு நீரை மட்டுமே நாங்கள் கேட்கிறோம்.

மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் அங்கு நீர் தேக்கப்பட்டிருக்கும். அப்படி நீர் தேக்கப்பட்டிருந்தால், மழைப்பொழிவு குறைவான நேரத்தில் கூடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த விட்டிருக்க முடியும். குடிநீருக்கும் கூட இது உதவியாக இருக்கும். மாதந்தோறும் திறந்து விடும் தண்ணீர் பலன் கூட தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும். இத்திட்டத்தை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் உண்மையில் தங்கள் சொந்த விவசாயிகளுக்குச் சிரமங்களை ஏற்படுத்துகிறார்கள்.

நாங்கள் அதை காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் சில மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளனர்; அவற்றை நாங்கள் செய்து வருகிறோம். அவர்கள் ஒப்புதல் அளித்ததும், நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com