

கர்நாடகாவில் நடைபெறும் கம்பளா எருமை பந்தயத்திற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், தண்ணீரை சேமிக்க இந்த பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் துளு பகுதி அடுத்த கடலோர பகுதிகளில் பிரபல கம்பளா எருமை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த கம்பளா-எருமைப் பந்தயம், 145 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட சுற்றுப்பாதையில் தண்ணீரை நிரப்பி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை எம்.எல்.டி 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதன் காரணமாக இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான கம்பளா எருமை பந்தயம் அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கம்பளா எருமை பந்தயம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி பேலே கூறுகையில், “விலைமதிப்பற்ற நீரையும், தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்தையும் சேமிக்க வேண்டும்.
மேலும், எளிமையான பாரம்பரிய தசராவை கொண்டாட வேண்டும். இது விலங்குகள் மீது திணிக்கப்படும் வன்முறையை அதிகரிக்கிறது” என்று கூறினார்.
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்ய உள்ளதாலும், மாநிலத்தில் உள்ள 1010 ஆழ்துளைக் கிணறுகளின் நீர்வரத்து குறைந்துள்ளதாலும், நீரை சேமிக்கும்படி முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து மாநிலத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் எளிமையான தசரா கொண்டாடுவது குறித்து மைசூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த ரெட்டியிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், “தசரா கொண்டாட்டத்தின் அளவு குறித்து தசரா உயர் அதிகார குழுவில் முடிவு செய்யப்படும்.
எளிமையான தசரா கொண்டாடப்படுவது என்பது அரசு எடுக்கும் முடிவு. இருப்பினும் இந்த ஆண்டு கம்பளா நடைபெறும்” என்றார்.