கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சதீஷ் ஜார்கிஹோலியை நியமிக்க கோரி கோவிலில் சிறப்பு வழிபாடு

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமாவை தொடர்ந்து, காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கடும் போட்டி வருகிறது.
Karnataka congress comittee president vacancy intensified
Published on

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்றார்.

இதையடுத்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் அலுவலகத்தில் கடிதத்தை சமர்ப்பித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு நாட்களுக்கு முன்பு பதவி விலகுமாறு உயர் தலைமை எனக்கு உத்தரவிட்டது. அதன்படி இன்று எனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தேன்.

கர்நாடக மக்களுக்கு இரண்டு முறை சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மேலிடம் டி.கே. சிவகுமார்-ஐ அடுத்த முதலமைச்சராக பரிந்துரைத்தது. இதற்கு நான் ஒப்புக்கொண்டுள்ளேன்” என்று சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

கர்நாடக காங்கிரஸில் தலைமை மாற்றம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பதவிகளுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்த டி.கே.சிவகுமார், முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றால், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் டி.கே. சிவக்குமார் விலக வாய்ப்புள்ள்ளது.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி, துணை முதலமைச்சர் பதவிக்கோ அல்லது கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கோ பரிசீலிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன.

இதையடுத்து பெலகாவி கோகாக்கில் அமைந்துள்ள லட்சுமி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியை கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்க கோரி அவரது ஆதராவாளர்கள் பிரார்த்தனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com