டெல்லியில் ராகுல் காந்தி, கார்கேவுடன் சித்தராமையா சந்திப்பு.. மகனை அமைச்சராக்க மும்முரம்!

சித்தராமையாவின் மகனைப் புதிய அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய துறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
டெல்லியில் ராகுல் காந்தி, கார்கேவுடன் சித்தராமையா சந்திப்பு.. மகனை அமைச்சராக்க மும்முரம்!
Published on

2023 இல் கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றபோது சித்தராமையா பாதி ஆட்சிக் காலமும், டிகே சிவகுமார் பாதி ஆட்சிக் காலமும் முதல்வராக இருப்பது முடிவானது.

சித்தராமையா இதுவரை கர்நாடக முதல்வராக இருந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தனது பதவியை டிகே சிவகுமாருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

நேற்று ஆளுநர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில் அவரின் ராஜினாமாவை இன்று ஆளுநர் தவார்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பை முடிவு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் பரபரப்பாகி உள்ளது.

நேற்று இரவே டிகே சிவகுமார் டெல்லி சென்ற நிலையில் சித்தராமையாவும் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

அங்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சித்தராமையா சந்தித்தார்.

அவருடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் புதிய அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய தனது ஆதரவாளர்களின் பெயர்கள், மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான பரிந்துரைகள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான பெயர்கள் அடங்கிய பட்டியல்களை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்தார்.

சித்தராமையா தனது யதீந்திர சித்தராமையாவை புதிய அமைச்சரவையில் சேர்க்க சேர்ப்பது குறித்தும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய துறை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சென்று சந்தித்து சித்தராமையா ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக தனது எம்பி சீட் வழங்க முன்வந்த காங்கிரஸ் தலைமையிடம் தான் கடைசி வரை கர்நாடக அரசியலில் மட்டுமே இயக்குவேன் என சித்தராமையா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் டிகே சிவகுமாரை முதல்வராக முன்மொழிந்து அமைச்சரவை தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகனை துணை முதல்வர் ஆக்க சித்தராமையா மும்முரமாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com