தமிழகத்திற்கு 9.91 டிஎம்சி தண்ணீர் திறக்கவேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் இன்று நடைபெற்றது.
cauvery water
Published on

காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சனை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சனைகளைத் தீர்த்து வருகின்றன. அந்த வகையில் மேலாண்மை ஆணையம் 50 முறை கூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தமிழகத்திற்கு 2026 ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி நீரினை சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினர்.

இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிடும்படி கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com