என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல்
    X

    நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல்

    • திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன்.
    • தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன். இன்று விவாகரத்து கோரும் முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

    தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் நடிகை ரன்யா ராவுடன் துபாய்க்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், அங்கிருந்து அவர் தங்கம் கடத்தியதாகவும் போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Next Story
    ×