

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் கோண்டோலா எனப்படும் கேபிள் கார் பெட்டிகளில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரின் காரணமாக சுற்றுலா பயணிகள் சென்ற பெட்டிகள் நடுவானில் சிக்கி நகர முடியாமல் இருந்தது.
இதையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்களின் உதவியோடு பெட்டிகளில் சிக்கிய பயணிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில்,
“தொழில்நுட்ப கோளாறு காரணமாக குல்மார்க் கோண்டோலா கேபிள் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அங்குள்ள நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அனைத்து பெட்டிகளும் சேதமடையாமல் உள்ளன.
சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான மீட்பு பணிகள், பயிற்சி பெற்ற குழுக்களுடன் களத்தில் நடைபெற்று வருகிறது.
நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடையத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.