மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபேவுக்கு சென்று திருமண பத்திரிகை வழங்கிய ஜீத் அதானி

அதானியின் இளைய மகனான ஜீத் அதானி அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.ஜீத் அதானி தனது வருங்கால மனைவி திவா ஷாவுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.
மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் கஃபேவுக்கு சென்று திருமண பத்திரிகை வழங்கிய ஜீத் அதானி
Published on

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் அதானி. அவரின் இளைய மகனான ஜீத் அதானிக்கும் திவா ஜெய்மின் ஷாவிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு முன்பாக ஜீத் அதானி தனது வருங்கால மனைவியுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், இந்த ஜோடி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மிட்டி கஃபேவிற்கு ஒன்றாக சென்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த கஃபேவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது திருமண பத்திரிகையை அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும், ஊழியர்களுடன் சேர்ந்து ஜீட் அதானி - திவ்யா ஷா ஜோடி கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

2023 ஆண்டு ஜூலை மாதம் இந்த மிட்டி கஃபேவை ஜீத் அதானி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மிட்டி கஃபே நிறுவனரான அலினா ஆலம், ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா ஜோடிக்கு நன்றி கூறியதோடு அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com