சொத்து வரி பாக்கி - ஜெயலலிதா வீட்டுக்கு சீல் வைப்பு

ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
சொத்து வரி பாக்கி - ஜெயலலிதா வீட்டுக்கு சீல் வைப்பு
Published on: 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சி சார்பில் இன்று ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.1.60 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவையில் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வரி கட்டப்படாமல் இருந்துள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com