ஜம்மு காஷ்மீர்: சிசிடிவியில் சிக்கிய பயங்கரவாதிகள்- தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர்

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர்.
terrorits
Published on

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில், லஷ்கர்-இ-தைபா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் அடர்ந்த பழத்தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் பிடிபட்டனர்.

முன்னதாக படையினருக்குக் கிடைத்த உளவுத் தகவலின் படி ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருந்தது தெரியவந்தது.இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

இத்தகவல் அறிந்து மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் நடத்தினர்.

இந்நிலையில் பயங்கரவாதிகள் முதலில் தென்பட்ட மீமந்தர் பகுதியைச் சுற்றி ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவை முற்றுகையிட்டு சுற்றிவளைத்தது.

இந்த தாக்குதலில் இருதரப்பினருக்கும் இடையே சுமார்  7:45 மணியளவில் துப்பாக்கிச் சண்டை மூண்டது. பின்னர் அவர்கள் ஒரு தோட்டத்தில் சென்று பதுங்கிக்கொண்டனர். இதனால் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இடையே நிறுத்தப்பட்டது.

அப்பகுதியில் தடிமனான இலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்துள்ளதால் , பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க ராணுவத்தின் சிறப்புப் பிரிவான விக்டர் போர்ஸ் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. பின்னர் இவ்விரு பயங்கிரவாதிகளும் பிடிபட்டனர்.

இவ்விருவர்களும் லஷ்கர்-இ-தைபா அமைப்பின் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டாளரான ஜாகிர் அகமது கனி மற்றும் அவனது கூட்டாளி லத்தீஃப் பட் என தகவல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மேலும் சில பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிகாப்பு படையினருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளில் காணியுடன் மற்றும் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகளைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது என்று அதிகாரிகள் தற்போது தெரிவித்தனர்.

யார் இவர்கள்?

பாதுகாப்பு அமைப்புகளின் தகவலின்படி, அங்கு சிக்கிய இரு பயங்கரவாதிகளும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு முதல் லஷ்கர் அமைப்பில் சேர்ந்த ஜாகீர் அகமது கானி, பயங்கரவாதத்தில் செயல்பட்டு வந்தார். இவர் குல்காமில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் பல்வேறு பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கானிக்கு தொடர்பு இருப்பதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com