வெறும் உணவல்ல, அது ஒரு பந்தம்..!- இந்தியாவின் மிகமுக்கிய மீன்பிடி மையமாகத் திகழும் கொச்சி

பரபரப்பான கடல் உணவு ஏலங்கள் வரை, இந்த நகரம் கடலின் தாளத்தோடு இயங்குகிறது.
வெறும் உணவல்ல, அது ஒரு பந்தம்..!- இந்தியாவின் மிகமுக்கிய மீன்பிடி மையமாகத் திகழும் கொச்சி
Published on

இந்தியாவில் பெருவாரியான மக்கள் கடல் மீன்களை வெறும் ஒரு வேளை உணவாக மட்டும் பார்க்காமல், தங்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்த பிரிக்கமுடியாத ஒருபந்தமாகவே பார்க்கின்றனர்.

நாடு முழுவதும் கடல்சார் உணவுகள் மக்களால் விரும்பப்பட்டாலும், பரபரப்பான துறைமுகங்கள், புகழ்பெற்ற சீன மீன்பிடி வலைகள், செழிப்பான மீன் சந்தைகள் ஆகியவற்றால் ஒரு நகரம் மேலும் சிறப்படைகிறது.

இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள கொச்சி, நீண்ட காலமாக நாட்டின் மிக முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சூரிய உதயத்திற்கு முன்பே கடலுக்குச் செல்லும் உள்ளூர் மீனவர்கள் முதல், நண்பகலில் நடைபெறும் பரபரப்பான கடல் உணவு ஏலங்கள் வரை, இந்த நகரம் கடலின் தாளத்தோடு இயங்குகிறது.

இறால்கள், கரிமீன், நண்டு, லாப்ஸ்டர், மஸ்ஸல்ஸ், கிளாம்ஸ், கணவாய், செப்பியா, சீர் ஃபிஷ் மற்றும் சூரை மீன் உள்ளிட்ட வகைகள் கொச்சி மக்களால் அதிகளவில் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.

மசாலாப் பொருட்களில் ஊறவைக்கப்பட்ட முத்துச் சங்கு மீன், வாழை இலையில் சுற்றப்பட்டு, பக்குவமாக சமைக்கப்பட்டு கரிமீன் பொளிச்சது என்ற பெயரில் கேரள மக்களால் உண்ணப்படுகிறது.

காரமான மிளகுத்தூளை கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து அறைத்து மசாலாவாக நண்டில் ஊறவைத்து சமைக்கப்பட்ட, நண்டு ரோஸ்ட் உணவை வெளியூர் மக்கள் அதிகளவில் உண்கின்றனர்.

கொச்சியில், கடல் உணவு என்பது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பரிமாறப்படும் ஒருவேளை உணவாக மட்டும் அல்லாமல், அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com