

கோடைக்காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,262 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை 18,262 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
18,262 சிறப்பு ரெயில்களில் தற்போது வரை 11,878 சிறப்பு ரெயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.