இதுல தான் மனநிம்மதி.. ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்

நேரக் எல்லைக்குள் இயங்கும் கார்ப்பரேட் சூழலை விட, தற்போதைய புதிய பணிச்சூழல் பெரும் மாற்றத்தை தந்துள்ளது.
இதுல தான் மனநிம்மதி.. ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்
Published on

மன உளைச்சல், பணிச்சுமையால் அதிக சம்பளம் தரும் ஐடி வேலைகளை உதறிவிட்டு பல இளைஞர்கள் மாற்றுத் தொழில்களை நோக்கி செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், ஒன்பது வருடங்களாகப் பார்த்து வந்த தனது ஐடி வேலையை விட்டுவிட்டு பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த தொழில்முனைவோரான நெஸ்ரின் மித்லாஜ் என்பவர் அந்த பெண்ணின் வீடியோவை பகிர்ந்ததன் மூலம் அவரின் கதை வைரலாகி வருகிறது.

வீடியோவின்படி, கடுமையான மன அழுத்தம், பணி நெருக்கடி காரணமாக தனது ஒன்பது ஆண்டுகால ஐடி வாழ்க்கைக்கு அப்பெண் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நேரக் எல்லைக்குள் இயங்கும் கார்ப்பரேட் சூழலை விட, தற்போதைய புதிய பணிச்சூழல் தனக்கு பெரும் மாற்றத்தையும் சுதந்திரத்தையும் தருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது ஆட்டோ ஓட்டுவதன் மூலம் இவர் மாதத்திற்குச் சுமார்ரூ.60,000 வரை சம்பாதிக்கிறார்.

இதில் வெறும் பணம் மட்டுமே முக்கியமல்ல, இந்தத் தொழில் தனது மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com