கடவுள் இதையா கேட்கிறார்? குழந்தைகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றும் அவலம்!

குழந்தைகள்மீது கொதிக்கும் பாலை ஊற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடவுள் இதையா கேட்கிறார்? குழந்தைகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றும் அவலம்!
Published on

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும், மதத்தின் பெயரிலும் அரங்கேறி வரும் அவலங்களையும், கொடூரங்களையும் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். அந்தவரிசையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

எந்தக் கடவுள் பச்சிளம் குழந்தைகளை துன்புறுத்தி தன்னை வணங்க சொல்கிறது அல்லது தனக்கு பரிகாரம் செய்ய சொல்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இரண்டு குழந்தைகள் மேல் பூசாரி போன்று இருக்கும் ஒருவர் கொதிக்கும் பாலை எடுத்து ஊற்றுகிறார்.

சூடு தாங்க முடியாமல் அந்த குழந்தைகள் அழுகின்றன. இருப்பினும் மீண்டும் அக்குழந்தைகள் மீது பாலை ஊற்றுகிறார். அக்குழந்தைகளை பிடித்திருப்பவர் அவர்களது தந்தைபோல தெரிகிறது. சிறுகுழந்தைகளுக்கு கொஞ்சம் சூடாக சாப்பாடு கொடுத்தாலே துடித்துவிடுவார்கள். அவர்கள்மீது கொதிக்கும் பாலை ஊற்றுவதைத்தான் இந்த கடவுள் விரும்புகிறாரா என்ன?

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் புயலையே கிளப்பியுள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com