சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை 14.2-லில் இருந்து 10 கிலோவாக குறைகிறதா?.. மத்திய அரசு விளக்கம்

மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை 14.2-லில் இருந்து 10 கிலோவாக குறைகிறதா?.. மத்திய அரசு விளக்கம்
Published on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், அதைச் சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் எடையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது முற்றுலும் வதந்தி என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சிலிண்டர் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றும், பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்களே என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளதாகவும், 14.2 கிலோ சிலிண்டர் விநியோகம் வழக்கம் போலவே தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com