Iran War Updates | அடுத்த 48 மணி நேரத்திற்கு., ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான வகையில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Iran War Updates | அடுத்த 48 மணி நேரத்திற்கு., ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இணங்குமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் இறுதி கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணி காலக்கெடு கொடுத்துள்ளார். இல்லை என்றால் திரும்ப முடியாத அளவிற்கு ஒரு நாகரிகமே அழியப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஈரான் மீது பயங்கரமான ஆயுதங்களை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே அடுத்த 48 மணி நேரத்திற்கு இருக்கவும் என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே இருருங்கள், அனைத்து மின்சார மற்றும் ராணுவ நிறுவனங்களை தவிர்க்கவும். பல அடுக்கு மாடி குடியிருப்பில், மேல் தளத்தில் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் உள்ள தூதரக தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது. +989128109115, 989128109102, 989128109109, 989932179359 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், cons.tehran@mea.gov.in என்ற மெயில் முகவரியையும் கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com