அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணைஅமைச்சர், பீகார் கவர்னர் பங்கேற்பு

ஈரானில் ஜூலை 4 முதல் 9 வரை ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி அரசுமுறை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
Iran Khamenei state funeral
Published on

ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அத்துமீறி நடந்த தாக்குதலுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதையடுத்து ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 4 முதல் 9 வரை ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி அரசுமுறை இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் பீகார் கவர்னர்:

கமேனியின் அரசுமுறை இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், பீகார் ஆளுநர் லெப்டினண்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிதா ஆகியோர் இந்திய அரசின் சார்பில் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com