தூய்மையான நகரங்களின் பட்டியல்: தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்

தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்து இந்த பெருமையை தக்கவைத்தது.
தூய்மையான நகரங்களின் பட்டியல்: தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்
Published on

புதுடெல்லி:

உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. 8வது முறையாக தொடர்ந்து முதலிடம் பிடித்து இந்த பெருமையை தக்கவைத்துக் கொண்டது.

இரண்டாவது இடம் சூரத்திற்கும், மூன்றாவது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது.

இதேபோல், இந்தியாவின் பெரிய நகரம் என்ற அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு கிடைத்துள்ளது. மக்களின் நன்மதிப்பு பெற்ற நகரம் ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு கிடைத்துள்ளது. அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com