என் மலர்
இந்தியா

நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது அறிவிப்பு
- கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது.
- கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார்.
அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது.
இந்த விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு, மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் செயல்பாட்டாளரும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான கிராசா மஷேல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து நெல்சன் மண்டேலாவை கிரகா திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






