இண்டிகோ பயணிகள் விமான நிலையங்களுக்கு சென்று வர புதிய வாடகை கார் சேவை அறிமுகம்

கடைசி நேர பயண ரத்துகள் மற்றும் சில பொதுவான சவால்களை தவிர்க்க இந்த புதிய சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது.
IndiGo Launches Airport Cab Service
Published on

இண்டிகோ நிறுவனம் விமான போக்குவரத்து சேவைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

கேப்ஸ் வித் இண்டிகோ:

இந்நிலையில் இண்டிகோ விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் நபர்கள், விமான நிலையங்களுக்கு சென்று வருவதை எளிதாக்கும் வகையில் ‘கேப்ஸ் வித் இண்டிகோ’ என்ற புதிய விமான நிலைய போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேப்ஸ் வித் இண்டிகோ மூலம் கடைசி நேர பயண ரத்துகள் மற்றும் விமான நிலைய போக்குவரத்தில் பயணிகள் சந்திக்கும் சில பொதுவான சவால்களை தவிர்க்க இந்த புதிய சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது.

மோஜோபாக்ஸ் போக்குவரத்துத் தளத்தின் மூலம் இயக்கப்படும் இந்தச் சேவை, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணிகளுக்கு விமான நிலையங்களுக்குச் சென்று வர உத்தரவாதமான, சரியான நேரத்திலான மற்றும் தொந்தரவில்லாத இணைப்பை வழங்குகிறது.

பயணிகள் விமான நிலைய பயணங்களை வெறும் ரூ.49 என்ற அறிமுக விலையிலிருந்து நேரடியாக இண்டிகோ தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சேவையில் விமானத் தாமதங்கள் மற்றும் பயண நிச்சயமற்ற தன்மைகளை எளிதாகச் சமாளிக்கும் வகையில், ஓட்டுநர்கள் 30 நிமிட இலவசக் காத்திருப்பு நேரத்தை வழங்குகிறார்கள்.

இந்த முன்பதிவு சேவையை ரத்து செய்வது முற்றிலும் இலவசம் என்றும் எந்தவித அபராத கட்டணமும் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயண சேவையை முன்பதிவு செய்ய இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது இண்டிகோ மொபைல் செயலி மூலமாகவோ புக்கிங் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தச் சேவையானது புறப்படுவதற்கு முன்பும், சென்றடைந்த பிறகும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் வகையிலும், பயணிகள் தங்கள் பயணங்களை மிகவும் சுமுகமாக நிறைவு செய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com