இண்டிகோ விமானம் மீது மோதிய கார்: கொல்கத்தாவில் பரபரப்பு

கார் மோதியதில் விமானத்தின் எஞ்சின் பகுதியில் சேதம் ஏற்பட்டது.
இண்டிகோ விமானம் மீது மோதிய கார்: கொல்கத்தாவில் பரபரப்பு
Published on

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென நகர்ந்து வந்து விமானத்தின் மீது மோதியது.

ஹேண்ட் பிரேக் செயலிழந்ததால் டிரைவர் இன்றியே நகரத் தொடங்கிய கார், விமானத்தின் மீது மோதியது. இதில் எஞ்சின் பகுதியில் சேதம் ஏற்பட்டது. மற்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கார் மோதியதில் சேதமடைந்த இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 விமானம் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.

விமானம் மீது மோதிய அந்தக் கார் உணவு கொண்டு செல்லும் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com