உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் கேலக்ஸ்ஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம்!

மேகமூட்டம், இருளையும் ஊடுருவிப் பார்த்து, பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் கேலக்ஸ்ஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம்.
உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் கேலக்ஸ்ஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம்!
Published on

பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸ்ஐ என்ற தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனம், மிஷன் த்ரிஷ்டி என்ற பெயரில் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

மிஷன் திருஷ்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஒரே செயற்கைக்கோளில் ஆப்டிகல் (Optical) மற்றும் SAR (Synthetic Aperture Radar) ஆகிய இரண்டு சென்சார்களையும் இணைத்து விண்ணில் ஏவப்பட்ட உலகின் முதல் வணிக ரீதியிலான செயற்கைக்கோள் இதுவாகும்.

ஆப்டிக்கல் சென்சார் பகல் மற்றும் தெளிவான வானிலையில் துள்ளியமாக படங்களை எடுக்கும்வேளையில், SAR தொழில்நுட்பமானது ரேடார் அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அனைத்து வகையான வானிலை மற்றும் ஒளி நிலைகளிலும் படமெடுக்க உதவுகிறது.

மேகமூட்டம், மழை அல்லது இருட்டு என எந்தச் சூழலிலும் புகைப்படங்களை துல்லியமாக இருக்கும். சுமார் 190 கிலோ எடையுள்ள இது, தனியார் நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்தச் சாதனையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com