இன்னிங்ஸ் வெற்றிக்குக் குறிவைக்கும் இந்தியா! ஆப்கானிஸ்தானுக்கு 'ஃபாலோ-ஆன்' கொடுத்து ஆட்டம்!

3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவுக்குள் ஆல்-அவுட் செய்ய பிளான்: இந்திய அணியின் தீவிர விக்கெட் வேட்டை!
Shubman Gill, K. L. Rahul,  Sai Sudharsan, Rishabh Pant, Manav Suthar, Washington Sundar
Shubman Gill, K. L. Rahul, Sai Sudharsan, Rishabh Pant, Manav Suthar, Washington Sundar
Published on

புதுச் சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று (ஜூன் 8) விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஷுப்மன் கில் (126 ரன்கள்), விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (81 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (81 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

வாஷிங்க்டன் சுந்தர் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அந்த அணியில் ரஹ்மத் ஷா மட்டும் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், ஆப்கானிஸ்தான் பேஸ்ட்மேன்களை நிலைகுலையச் செய்தார்.

தனது அசாத்திய சூழலால் 6 விக்கெட்டுகளை (6/33) வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் 7- வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

அவருக்கு துணையாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 412 ரன்கள் பிரமாண்ட முன்னிலை பெற்றது. இதனால் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 'ஃபாலோ-ஆன்' வழங்கினார்.

தற்போது 3 ஆம் நாள் ஆட்டத்தில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான செதிகுல்லா அடல் மற்றும் அப்துல் மாலிக் ஜோடி இன்னிங்ஸை மீட்கப் போராடி வருகிறது.

3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவுக்குள் ஆப்கானிஸ்தான் அணியை மீண்டும் சுருட்டி, இன்னிங்ஸ் வெற்றியைப் பெற இந்திய அணிய தீவிரமாக போராடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com