செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்

செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.மத்திய நிதி அமைச்சகம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
செல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நிதிஅமைச்சகம் நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்ககட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜிஎஸ்எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசின் வருவாய்த்துறை குறைத்துள்ளது.

உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், மேலும் செல்போன்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்.

இந்த நடவடிக்கை இந்தியாவின் செல்போன் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இறக்குமதி வரிகுறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் செல்போன் விரிவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது

X

Maalai Malar
www.maalaimalar.com