போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை?

பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு பிறகு முதன்முறையாக இருநாட்டு அதிகாரிகள் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை?
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தாக்குதல்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், இந்திய ராணுவ அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா தரப்பு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து பேச பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com