search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 மாநாடு: இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் அறிவிப்பு
    X

    ஜி20 மாநாடு: இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் அறிவிப்பு

    • ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர்.
    • ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார். பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு பெரிய கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் அமைக்கப்படும் என்று இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இணைந்து கூட்டாக அறிவித்து உள்ளன.

    தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழித்தடமானது, ஜி20 உச்சிமாநாடு துவங்கும் முன்பு அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் சேர்ந்து அறிவித்த சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிகிறது.

    இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொருளாதார வழித்தடம் அமைப்பது தொடர்பாக நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. மேம்பட்ட இணைப்பு மூலம், ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே இந்த வழித்தடம் பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தும்.

    புதிய வரலாற்று சிறப்புமிக்க வழித்தடம் தொடர்பான திட்டத்தில் நாடுகள் இடையே இணைப்பு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் அதே வேளையில், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை அளிப்பதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

    Next Story
    ×