இந்தியாவில் மாருதி சுசூகி ஆலையில் ரூ.35,000 கோடி முதலீடு செய்த ஜப்பான்!

இந்தியாவில் மாருதி சுசுகியின் நான்காவது உற்பத்தி ஆலை ஹரியானாவின் கார்கோடாவில் கட்டப்படவுள்ளது.
India Japan Summit
Published on

இந்தியா-ஜப்பான் இடையேயான 16வது வருடாந்திர உச்சி மாநாடு புது டெல்லியில் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

இந்த சந்திப்பில் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, வர்த்தக மேம்பாடு, மின் உற்பத்தி போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்த முற்படுகின்றன.

மாருதியின் நான்காவது உற்பத்தி ஆலை:

இந்த உச்சி மாநாட்டின் தொடக்கத்தில், இந்திய ஜப்பான் இடையேயான முதலீடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் விளைவாக இந்திய வாகனத் துறையில் ஜப்பான் மேற்கொண்ட ஓர் மிகப்பெரிய முதலீடாக இந்தியாவில் மாருதி சுசுகியின் நான்காவது உற்பத்தி ஆலை ஹரியானாவின் கார்கோடாவில் கட்டப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஜப்பானின் இந்த முதலீடு அதிக அளவாக விளங்குக்கிறது. இதன் மூலம் குருகிராம், மனேசர் மற்றும் குஜராத்திற்குப் பிறகு, இந்தியாவில் மாருதி சுசுகியின் நான்காவது உற்பத்தி ஆலை ஹரியானாவின் கார்கோடாவில் கட்டப்படவுள்ளது.

தற்போது வரை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களை இந்த மூன்று ஆலைகளும் உற்பத்தி செய்து வருகின்றன. இதனை படிப்படியாக உயர்த்தி ஆண்டுக்கு 10 லட்சம் வரை விரிவுபடுத்துவதையே இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த நான்காவது ஆலைக்கான தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சியும் இணைந்து திறந்து வைக்க உள்ளனர். இந்த விழாவில் இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்துடன் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் பயணம் ஜப்பான்-இந்தியா பொருளாதார உறவுகளில் உறுதியான மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக ஜப்பான் கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com