இந்தியாவின் முதல் நீர் விமான சோதனை வெற்றி

19 இருக்கைகள் கொண்ட விமானமான இது நிலத்திலும் நீரிலும் தரையிறக்கப்பட்டு மற்றும் புறப்படும் வசதி கொண்டது.
இந்தியாவின் முதல் நீர் விமான சோதனை வெற்றி
Published on

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கா தடுப்பணை அமைந்துள்ள பசுலோக் பகுதியில், டி ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஓட்டர் ரக நீர்மூழ்கி விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நடத்தியது. இந்தியாவில் ஒரு டர்போபிராப் விமானம், மிதவிகள் பொருத்தப்பட்டு நீரில் இயங்கும் விமானமாக மாற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த சோதனையை அவானி சிங் தலைமையிலான ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் நடத்தியது.

19 இருக்கைகள் கொண்ட விமானமான இது நிலத்திலும் நீரிலும் தரையிறக்கப்பட்டு மற்றும் புறப்படும் வசதி கொண்டது.

இந்தச் சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அந்தமான், லட்சத்தீவு, தேரி ஏரி போன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதான விமானப் போக்குவரத்தை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், இத்தகைய நீர் விமானச் சேவைகளை வணிக ரீதியாகத் தொடங்குவதற்கான அடுத்தகட்டப் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com