

இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் கடைசியாக 2018-ம் ஆண்டு ஈரானில் இருந்து சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) வாங்கி இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக பின்னர் அங்கிருந்து இறக்குமதியை நிறுத்தியது.
தற்போது வளைகுடா போரால் பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்ய 1 மாதம் அமெரிக்கா அனுமதித்தது.
இதைத்தொடர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனம் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஈரானில் இருந்து 43 ஆயிரம் டன் எல்.பி.ஜி. வாங்கியுள்ளது.
இந்த சமையல் கியாசை அது பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுடன் அது பகிர்ந்து கொள்ளும். எனினும் இந்த 43 ஆயிரம் டன் எல்.பி.ஜி. இந்தியாவில் அரை நாளுக்கான தேவையை மட்டுமே நிறைவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.